செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (10:26 IST)

நேற்று 7000, இன்று 10,000.. ஒரே நாளில் 3000 அதிகமான கொரோனா பாதிப்பு..!

நேற்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7633 என்று இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 3000 பேர் அதிகரித்து 10 ஆயிரத்துக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 542 என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அளவில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 61233 என்ற இறந்த நிலையில் இன்று 63,562 என்ற அதிகாரித்துள்ளது. 
 
மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஒரே நாளில் 10,000க்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்ததால்தான் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran