திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (10:03 IST)

இந்திய அளவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.. இன்று எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் சமீபத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன் 11,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7633 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 61233 என உள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 6702 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளத்.
 
நாடு முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்ததால்தான் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran