1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (21:39 IST)

’மோடி ’பெட்ரோல் விலையை உயர்த்தப்போகிறார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

நம் நாட்டில் மக்களவைத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் உற்சாகத்துடன்  நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்ப்பை தேர்தல் கருவி மூலம் எழுதிவருகின்றனர். வரும் மே 23 ஆம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
பிரதமர் மோடி தன்னைப்பற்றி பெருமை பேசுகிறார். மக்களவை கவர்வதற்காக தவறான தகவல்களை பரப்புகிறார்.
 
மேலும் வரும் மே 23 ஆம் தேதிவரை பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டாம் என்று பெட்ரோல் நிறுவனத்தைக் கேட்டுள்ளார் மோடி. தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் - டீசல் விலையை ரூ. 5 - 10 வரைக்கும் உயர்த்தவே தற்போது முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

மேலும்  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து ரூ. 69.61 ஆக உள்ளது. கச்சா எண்ணெய்யும் விலையும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.