பிரதமர் பெயரை மாற்றிக் கூறிய அமைச்சர் : மக்கள் சிரிப்பு

admk
Last Updated: ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (15:08 IST)
வரும் நாடாளுமன்றம் இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் முதல்  வேட்பாளர்கள் அனைவரும் தீடீரென்று உளறுவது மக்களுக்கு வேடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மாற்றி கூறினார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
 
நாமக்கல் காளியப்பனை ஆதரித்து காக்காவேரி  பகுதியில் அமைச்சர் சரோஜா வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும் போது பாரத பிரதமர் அப்துல் என்று கூறி..பின்னர் உடனே சுதாரித்து பிரதமர் மோடி என்று கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :