புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (11:28 IST)

ராணுவ உடையில் கலக்கிய பிரதமர் மோடி, எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்

பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை காஷ்மீர் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் ராணுவ உடையணிந்து கொண்டாடினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி, தனது தீபாவளி பண்டிகையை காஷ்மீரின் எல்லை மாவட்டமான ராஜவுரியில் ராணுவத்தினருடன் கொண்டாடினார். அங்கு அவர் ராணுவ உடையுடனேயே திகழ்ந்தார்.

அந்த பகுதியில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோட்டில் உள்ள வீரர்களுடன் இனிப்புகளை பகிர்ந்துகொண்டார். மேலும் அவர்களுடன் கிட்டட்தட்ட இரண்டு மனி நேரங்களாக உரையாடினார். மோடியுடன் ராணுவ தலைமை ஜெனரல் பிபின் ராவத்தும் உடனிருந்தார்.

மேலும் அங்குள்ள 1000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களிடம் பேசிய மோடி, ராணுவத்தினரின் பாதுகாப்பினாலும் துணிச்சலினாலும் இதுவரை மத்திய அரசு நாட்டிற்கு தேவையான அனைத்து முடிவுகளையும் எடுக்கமுடிந்தது” என கூறினார்.

”அனைவரும் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவார்கள். அதனால் தான் நான் என்னுடைய குடும்பத்துடன் தற்போது தீபாவளியை கொண்டாட வந்திருக்கிறேன்: என அங்கிருந்த ராணுவத்தினரிடம் கூறினார்.

பின்பு பாகிஸ்தானை குறிப்பிடுவது போல், “அவர்கள் காஷ்மீரின் பகுதிகளை ஆக்கிரமிக்க முயல்கிறார்கல், ஆனால் நமது துணிச்சலான படைவீரர்கள் எதிரிகளை அழித்து, காஷ்மீரை நம்முடன் வைத்து கோண்டுள்ளோம், காஷ்மீரின் சில பகுதிகள் அவர்களின் ஆக்கிரமிப்பிற்குள் இருக்கலாம், ஆனால் காஷ்மீர் நமது இதயத்தில் இருக்கிறது” என கூறினார்.

இறுதியாக, “நமது நாட்டு மக்கள் சார்பாக, ராணுவத்தினரின் சேவைக்கு, நான் எனது மனமாற நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். மேலும் பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் தான் ராணுவத்தினரிடம் தீபாவளியை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.