செவ்வாய், 1 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (16:04 IST)

மகாராஷ்டிரத்தில் திடீர் நிலநடுக்கம்: மக்கள் அலறியடித்து ஓடியதால் அச்சம்!

earthquake
மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதி மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தேசிய நிலஅதிர்வு மையத்தின் தகவலின்படி, அமராவதி பகுதியில் மதியம் 1:37 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 என பதிவாகியுள்ளன.
 
இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அமராவதி துணை ஆட்சியர் அனில் பட்கர் கூறினார்.
 
இந்த நிலநடுக்கம் சிக்கல்தாரா, கட்கும்ப், சுர்னி, பச்டோங்ரி தாலுகாக்கள் மற்றும் மேல்காட் பகுதியில் நன்கு உணரப்பட்டது, இதனால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். 
 
அதேபோல், பரத்வாடா நகரின் சில பகுதிகளிலும், அகோட் பகுதியில் உள்ள தர்னியிலும் சின்னதாய் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
 
Edited by Mahendran