மருத்துவரை தாக்கிய முதலமைச்சரின் மகள்: டுவிட்டரில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்
மருத்துவரை தாக்கிய முதலமைச்சரின் மகள்: டுவிட்டரில் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்
மிசோரம் மாநில முதலமைச்சரின் மகள் மருத்துவரை மருத்துவமனையில் தாக்கிய நிலையில் அதற்காக மிசோரம் மாநில முதலமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்
மிசோரம்மாநில முதலமைச்சரின் மகள் மிலாரி சாங்டே என்பவர் மருத்துவமனையில் உள்ள தோல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்
முன் அனுமதி இல்லாததால் மருத்துவர் முதலமைச்சர் மகளை சந்திக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து கோபமடைந்த முதல் அமைச்சரின் மகள் அங்கிருந்த மருத்துவரை தாக்கியுள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகியது.
இது குறித்து முதலமைச்சர் மகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மகளின் தவறான நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.