திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (13:21 IST)

வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா? அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி..!

Suresh Gopi
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வயநாட்டில் ஆய்வு செய்த பின், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி அளித்துள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து கூறியபோது, ‘நிலச்சரிவால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே பிரதான பணி என்றும், மாயமானவர்கள் தொடர்பான விபரங்கள் சரியாக இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தேடுதல், மீட்பு பணிகளுக்கு கூடுதல் வீரர்கள் தேவை என கேரள அரசு கேட்டால், மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது என்று கூறிய அமைச்சர் சுரேஷ் கோபி, முண்டகை, சூரல் மலையில் பாதிப்புகளை ஆய்வு செய்த சுரேஷ் கோபி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சுரேஷ் கோபி கூறி இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva