திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2017 (15:56 IST)

விவசாய நிலத்தின் மீது அமைச்சரின் 35 கார்கள் அணிவகுப்பு: பயிர்கள் நாசம்!!

உத்திரபிரதேசத்தில் விவாசாயின் பயிர் நிலத்தில் அமைச்சர் தனது 35 கார்களுடன் அணி வகுத்து சென்று பயிர்களை நாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலமையில் பாஜக ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அங்கு உள்ள ஜலான் மாவட்டம், உராயில் பகுதியில் கோசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஏற்பாடு செய்யப்படிருந்தது.
 
இந்த விழாவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிங்  அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது 35 கார்கள் அணிவகுப்புடன் பயிர் செய்யப்பட்டிருந்த விதைத்த நிலத்தின் வழியாக சென்றுள்ளார். 
 
விவாசயிகள் விதை விதைத்து ஒருவாரம் ஆகியுள்ள நிலையில் பயிரில் முளை வரும் சமத்தியல் அமைச்சர் இவ்வாறு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
35,000 ரூபாய் கடன் வாங்கி பயிர் விதைத்த நிலத்தில் இப்படி செய்துவிடீர்களே என விவாசாயி ஒருவர் அமைச்சரின் காலை பிடித்து கதரிய போதும் அமைச்சர் இதை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.
 
மேலும், அமைச்சருக்கு பின்னால் சென்ற காரில் இருந்த ஒரு அதிகாரி ரூ. 4,000-தை விவசாயியிடம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.