செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (14:51 IST)

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய கூட்டத்தில் கல்வீச்சு: பெரும் பரபரப்பு

கடந்த சில மாதங்களாகவே அதிமுக அமைச்சர்களுக்கு நேரம் சரியில்லை போலும். மக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்து வரும் அமைச்சர்களுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்த போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மேடை மீது கற்களை வீசியுள்ளனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 
 
இதனையடித்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு கூட்டத்திலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் வெளியேறினார்.