செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (14:50 IST)

கமல் மீது வழக்குப்பதிவு உறுதி: அமைச்சர் ஜெயக்குமார்

நிலவேம்பு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கமல் மீது வழக்குப்பதிவு செய்வது உறுதி என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதனால் கமல் மீது எந்த நேரத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.



 
 
தனது ரசிகர்கள் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டாம் என்றும், இதுகுறித்த ஆய்வு வரும் வரை பொறுமை காப்போம் என்றும் தனது டுவிட்டரில் கமல் தெரிவித்திருந்தார்
 
நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்தவித பக்கவிளைவும் இல்லை என்றும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயம் செயல்படுகிறது என்று மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கமல்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
 
கமல் மீது இந்த விவகாரத்தில் வழக்கு தொடுக்க முகாந்திரம் இருந்தால் தாராளமாக வழக்கு தொடரலாம் என்று இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்ததை அடுத்து கமல் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்