ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 16 நவம்பர் 2019 (13:05 IST)

கீழே விழுந்து நொறுங்கியது போர் விமானம்..

கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போர் விமானங்கள் கட்டுபாடை இழந்து கீழே விழுந்து நொறுங்கும் சம்பவங்கள் இந்தியாவில் ஆங்காங்கே சமீப காலமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் கோவாவில் மிக் 29 கே என்ற போர் விமானத்தில் 2 விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

எனினும் இந்த விபத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.