ஆளுனர் இந்தியில் பேசியதால் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு.. சட்டமன்றத்தில் பரபரப்பு..!
சட்டமன்றத்தில் ஆளுநர் ஹிந்தியில் பேசியதை அடுத்து எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில் இன்று சட்டமன்ற கூடியது. இந்த நிலையில் மேகாலய மாநில ஆளுநர் இந்தியில் தனது பேச்சை தொடங்கிய நிலையில் மேகாலயா இந்தி பேசும் மாநிலம் அல்ல என்றும் அஸ்ஸாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்டதால் தான் மக்களும் தலைவர்களும் சேர்ந்து முடிவு செய்து தனி மாநிலம் பெற்றோம் என்றும் எங்களுக்கு புரியும் மொழியில் ஆளுநர் பேச வேண்டும் என்றும் மக்கள் குரல் கட்சி எம்எல்ஏக்கள் குரல் கொடுத்தனர்.
இருப்பினும் மேகாலயா ஆளுநர் தொடர்ந்து ஹிந்தியில் பேசிக் கொண்டதை அடுத்து மக்கள் குரல் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
ஆங்கிலத்தை அலுவல் மொழியாக கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் ஆளுநர் இந்தியில் பேசியது அம்மாநில சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva