திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (08:31 IST)

அக்‌ஷய் குமார் நடிக்கும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.சூர்யா கேரக்டரில் அக்சயகுமார் நடிக்க இருப்பதாகவும் அபர்ணா பாலமுரளி கேரக்டரில் ராதிகா மதன் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் இப்போது படத்துக்கான பாடல் பதிவு தற்போது நடந்து வருவதாக ஜி வி பிரகாஷ் புகைப்படத்தோடு பதிவு செய்திருந்தார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் மேலும் சில நிறுவனங்களோடு இணைந்து  தயாரிக்கிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.