Maharashtra assembly election: மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் வருகிற 20ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே ஆகியோர் இணைந்துள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.
இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கூட்டணி, மகளிர்க்கு இலவச பேருந்து, மாத உதவித் தொகை உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்திருந்தது. இன்று பாஜக தனது மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, லட்கி பஹின் யோஜனா, விருத் பென்சன் யோஜனா திட்டங்களின் உச்சவரம்பை உயர்த்துதல், அரசு அமைத்த 100 நாட்களுக்குள் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கு ஆவணம் வெளியிடப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை தெரிவித்துள்ளனர்.
இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக பாஜகவின் வாக்குறுதிகள் உள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ள உத்தவ் தாக்கரேவிடம் கேட்கிறேன். ராகுல்காந்தியால் வீர் சாவர்க்கர் குறித்து இரண்டு நல்ல வார்த்தை பேச முடியுமா? காங்கிரஸார் உங்கள் தந்தை பாலாசாகேப் தாக்கரே குறித்து நல்லதாக சில வார்த்தைகள் பேசுவார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K