திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 நவம்பர் 2024 (15:41 IST)

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

water
நாகை அருகே 3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரிக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில்  வசிக்கும் மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறுகள் மூலம் ராட்சச குழாய்களை வைத்து தினமும் 22.20 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்த போது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து இஜிஎஸ் பிள்ளை தனியார் கல்லூரி சாலை வழியாக செல்லும் ராட்சத குடிநீர் குழாய்களை தோண்டி பார்த்தபோது தனியார் கல்லூரி நிர்வாகம் பைப்லைன் மூலம் தண்ணீரை திருடியது அம்பலமானது.

தினமும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் என கடந்த மூன்று மாதங்களாக சுமார் 3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் மாவட்ட ஆட்சியர் அந்த தனியார் கல்லூரிக்கு ரூபாய் 2 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva