புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (09:38 IST)

சட்டப்படிப்புகளில் பாடமாக மனுஸ்மிருதி.. டெல்லி பல்கலை. பரிந்துரை! - வெடித்தது சர்ச்சை!

Delhi University

டெல்லி பல்கலைக்கழகத்தின் சட்டப் படிப்புகளில் மனு ஸ்மிருதியை பாடமாக சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சட்டப்படிப்புகளை வழங்கி வரும் முன்னணி பல்கலைக்கழகங்களில் டெல்லி பல்கலைக்கழகமும் ஒன்று. சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக சட்டப்படிப்புகள் துறை சார்பான முடிவெடுக்கும் குழுவின் கூட்டத்தில் மனு ஸ்மிருதி குறித்து ஜி.என்.ஜா மற்றும் டி.கிருஷ்ணஸ்வாமி ஐயர் ஆகியோர் எழுதிய விளக்க புத்தகங்களை இளங்கலை சட்டப்படிப்புகளின் முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு பாடத்திட்டத்திற்கு சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரையை இடதுசாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பான SDTF கடுமையாக எதிர்த்துள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ள அவ்வமைப்பினர், பெண்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் மனுஸ்மிருதி கல்வி முறையை சீர்குலைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பரிந்துரையை எதிர்த்து கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சி, இதன்மூலமாக அரசியலமைப்பை சூறையாடும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கனவை நிறைவேற்ற பிரதமர் மோடி முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K