1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (07:35 IST)

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

Rajnath Sing
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு திடீரென முதுகு வலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அறுவை சிகிச்சை நிபுணர் கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டதாகவும் அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் அவருக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பிறந்த நாளின் போது அவர் அதிகமான வேலையில் ஈடுபட்டதால் அவருக்கு மீண்டும் முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் ஒரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தனது வழக்கமான பணியை கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Edited by Siva