திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (22:01 IST)

மணிப்பூர் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு !

landslide
மணிப்பூரில் நோனே மாவட்டத்தில் உள்ள துபுல் என்ற இடத்தில் மத்திய ரெயில்வேயின் கட்டுமானப் பணி நடந்தது. அப்போது, கடந்த ஜூன் 30 ஆம் தேதி அன்று அப்பகுதியில், கடும் நிலச்சரிவு ஏற்பட்ட்து.

அந்தக் கட்டுமானப் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் பொருட்டு பணியில் இருந்த ராணுவ வீரர்களும் இந்த நிலச்சரிவில் சிக்கினர். இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வத் அவர்களைக் காப்பாற்றும் நவடடிக்கையில் ஈடுபட்டனர்.

இன்றும் அப்பகுதியில் மீட்புப் ப்ணி தொடர்ந்தது, அதில், 3 உடகளை மீட்டனர், தற்போது வரை நிலச்சரியில் பலியானோர் எண்னிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் 8 பேரை தேடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது.