திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (12:46 IST)

மண்சரிவால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ,10 லட்சம் நிவாரணம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஸ் குடும்பத்தினருக்கு ரூ,10 லட்சம்  நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மதுரை மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் சதீஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், முதலமைச்சரின் பொது  நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படு என அறிவித்துள்ளார்.