ஓடும் ரயிலில் சுய இன்பம் செய்த ஆண் ; வீடியோ எடுத்த இளம்பெண்
ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் முன்பு சுய இன்பம் செய்த ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை புறநகர் ரெயிலில் ஒரு இளம்பெண் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தார். பெண்கள் பெட்டியில் தனியாக அமர்ந்திருந்த அவரைக் கண்ட ஒரு வாலிபர் ஆபாச சைகைகளை காட்டியுள்ளார். அதன்பின், திடீரெனெ அவரின் முன்பு சுய இன்பம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை தனது மொபைல் மூலம் வீடியோ எடுத்த அந்த பெண், ரெயில்வே போலீசாருக்கு அதை அனுப்பினார். அதனையடுத்து, அந்த வாலிபரை தேடி வந்த போலீசார் இன்று காலை சத்ரபதி ரயில் நிலையத்தில் அவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவரின் பெயர் க்ருபா பட்டேல் என்பதும், அவர் ஒரிசாவை சேர்ந்த அவர், தினக்கூலியாக அவர் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.