வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:21 IST)

நிதீஷ்குமாருக்கு நான்கு விரல்களை காணிக்கையாக தொண்டர்! இப்படியும் ஒரு ஆளா?

பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் நிதீஷ்குமார் மீண்டும் வெற்றிபெற்றதை அடுத்து அவருக்காக ஒரு தொண்டர் தனது விரலைக் காணிக்கையாக்கியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 243 உறுப்பினர்களை கொண்ட இம்மாநிலத்தில் 125 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றியது. பாஜக 74 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றதை அடுத்து சமீபத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூடி நிதிஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்தனர். இதனை அடுத்து 7வது முறையாக முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கிறார் அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பீகார் ஜெஹனாபாத்தில் வசித்து வரும் அனில் சர்மா என்ற நபர் தனது நான்காவது விரலை வெட்டி இறைவனுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் நிதீஷ் முதல்வரான போதும் இதேபோல மூன்று முறை தனது விரல்களைக் காணிக்கையாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.