1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (07:39 IST)

பாஜகவினர் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

எங்களைத் திருடர்கள் என்று குற்றம் சாட்டும் பாஜகவினர்களை விட மிகப்பெரிய திருடர்கள் யாரும் கிடையாது என்றும், அவர்கள் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள் எனவும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசுக்கும் மேற்கு வங்காள மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அவரது கார் மீது கல்லெறிந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது இதனை அடுத்து மேற்கு வங்க முதல்வரும் மேற்கு வங்க கவர்னருக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்தது 
 
இந்த நிலையில் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி ’மேற்கு வங்க கவர்னரையும் மத்திய அரசையும் மிகவும் கடுமையாக பேசினார். நாங்கள் மேற்கு வங்க மக்களுக்கு பணியாற்றி வருகிறோம் என்றும் ஆனால் எங்களை எப்போதும் மத்திய அரசு திருடர்கள் என்று கூறி வருகிறது என்றும் பாஜகவினர்களை விட திருடர்கள் வேறு யாரும் கிடையாது என்றும் அவர்கள் மிகப்பெரிய கொள்ளைக்காரர்கள் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் இந்து முஸ்லிம் சீக்கியப் மற்றும் கிறிஸ்தவர்களிடையே பாஜகவினர் வேறுபாட்டை வளர்க்கின்றனர் என்றும் இதைத்தான் அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டு வந்தார்கள் என்றும் அவர் கூறினார் 
 
2014ஆம் ஆண்டு தேர்தலின் போது அனைவரது வங்கி கணக்கில் ரூபாய் 15 லட்சம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று அவர்கள் எப்போதும் போய் வாக்குறுதியை தான் அழைப்பார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது