பாஜக ரஜினிக்கு பின்னணி இல்ல.. எப்பவுமே முன்னணி! – பொன்னார் கருத்து!
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க உள்ள நிலையில அவரது பின்னணியில் பாஜக இருப்பதாக பேசப்படுவதை பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் ஜனவரியில் கட்சி தொடங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை பின்னாலிருந்து பாஜக இயக்குவதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன் ”ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதின் பின்னணியில் பாஜக இல்லை. பாஜக எப்போது பின்னணியில் இருக்காது. முன்னணியில்தான் இருக்கும்” என கூறியுள்ளார்.