புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (08:48 IST)

இடதுசாரிகளின் ஆதரவைக் கேட்கும் மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜி இடதுசாரிகளின் ஆதரவைக் கேட்டுள்ளது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் இடதுசாரிகள் வலுவாக இருந்த பகுதிகளில் கேரளாவும் மேற்கு வங்கமும் முக்கியமான மாநிலங்கள். தொடர்ந்து 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தனர். அவர்களை வீழ்த்தி 2011 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். அதிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகளாக அவர் முதல்வராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக மம்தா பானர்ஜி இடதுசாரிகளிடம் ஆதரவைக் கோரியுள்ளார். இதனால் பாஜகவை வீழ்த்தும் திட்டத்தில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.