வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (19:17 IST)

சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது ... பக்தர்கள் பக்தி பரவசம்

கேரள மாநிலம் சபரிமலையில் இன்று மகர ஜோதியைக் காண 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கேரள மா நிலத்த்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சி நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டுக் கொண்டு சபரிமலைக்கு பாதையாத்திரை செல்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரொனா கட்டுப்பாடுகள் காரணமாக கூட்டம் குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மகரஜோதியைக் அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.,

மகரவிளக்கு பூஜையை ஒட்டி கடந்த மாதம் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், இன்று நடக்கும் மகர ஜோதியைக் காண ஆன்லைனில் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகரஜோதியை முன்னிட்டு  ஐயப்பனுக்கு பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரண பெட்டி கோயிலுக்கு வந்தடைந்த பின், சாமியே சரணம் ஐயப்பா என பக்தர்களின் கோஷம் முழங்க  பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது.