கூட்டத்தை கட்டுப்படுத்த சபரிமலை தரிசனத்தில் புதிய மாற்றம்!
சபரிமலை கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை 90,000 ஆக குறைக்கவும் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்கவும் முடிவு செய்தது.
அதன்படி முதல் பாதியில் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரண்டாவது பாதியில் மாலை 3 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் தரிசன நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இருப்பினும் பக்தர்களி வருகையால் ஏற்படுகின்ற நெரிசலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. வயது மூத்தோர் மற்றும் சிறுவர் சிறுமிகளின் பாதுகாப்பு கருதி முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தினசரி பக்தர்களின் தரிசன எண்ணிக்கையை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று காவல்துறை தேவசம்போர்டுக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.