செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (08:57 IST)

இன்னும் ஒரு மாதத்தில் முதல்வர் பதவியை இழக்கும் உத்தவ் தாக்கரே? அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்னும் ஒரு மாதத்தில் தனது முதல்வர் பதவியை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சி கூட்டணி அமைத்த நிலையில் தேர்தலுக்கு பின் இந்த கூட்டணி உடைந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைப் பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற போது அவர் எம்எல்ஏவாக இல்லை என்பதும் அடுத்த 6 மாதங்களுக்குள் அவர் தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்றும் கவர்னரால் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆறு மாத கால அவகாசம் மே மாதம் 28ஆம் தேதியுடன் முடிகிறது. அதாவது இன்னும் 28 நாட்களுக்குள் அவர் எம்எல்ஏ ஆகவேண்டும் என்றும், இல்லை எனில் அவரது பதவிக்கு ஆபத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்தப் பிரச்சனைக்கு முடிவு தானே மகாராஷ்டிரா மாநில அமைச்சர்கள் சமீபத்தில் ஆளுனரை சந்தித்து, உத்தவ் தாக்கரே தான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் இதனை அடுத்து தேர்தல் நடைபெறும் வரை உத்தவ் தாக்கரே முதல்வராக நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் கவர்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக கவர்னர் கூறியுள்ளதாக தெரிகிறது
 
மேலும் உத்தவ் தாக்கரே தனது பதவி விஷயத்தில் தலையிட்டு நல்ல முடிவை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் பாஜகவிற்கு துரோகம் செய்து உத்தவ் தாக்கரே எதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து உள்ளதால் உத்தவ் தாக்கரே பதவியில் நீடிக்க பிரதமர் மோடி உதவுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்