திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (11:02 IST)

ஆறு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்! – மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

மகாராஷ்டிராவில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது 6 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் உள்ள காரவலி கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில காலமாக கணவன் – மனைவி இடையே கடும் சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கணவர் வீட்டினர் சிலர் பெண்ணை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது 8 மாத குழந்தை உள்பட 6 குழந்தைகளையும் அருகில் உள்ள கிணற்றில் வீசி கொன்றுள்ளார்.

இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்து போலீசார் குழந்தைகளை கிணற்றில் இருந்து மீட்டனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்திருந்தன. இந்த வழக்கில் பெண்ணை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.