1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 13 மே 2021 (22:12 IST)

மகாராஷ்டிராவில் மளமளவென குறையும் கொரோனா வைரஸ்: ஆச்சரிய தகவல்!

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருந்த மகாராஷ்டிரா மாநிலம் தற்போது கொரோனாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் தினமும் 60 ஆயிரத்தை தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அங்கு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக வெகுவாக குறைந்துள்ளது 
 
இன்று வெளியான தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் வைரசால் 42 ஆயிரத்து 582 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 54,535 கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 850 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் மகாராஷ்ட்ர மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,69,292 என்றும் மொத்தம் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை 46,54,731என்றும் மொத்தம் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 78,857என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,33,294 என்றும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு ஊரடங்கு நீடித்தால் இந்த பாதிப்பு இன்னும் பாதிக்குமேல் குறையும் என்று மாநில சுகாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்