1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (10:27 IST)

30 எம்எல்ஏக்கள் அசாமில்.. என்ன செய்ய போகிறார் உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிரா 30 எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று இரவு விமானம் மூலம் அசாமின் குவாஹாட்டி நகருக்கு சென்றனர். 

 
மகாராஷ்டிராவில் முன்னதாக நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. அதுமுதல் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் சிவசேனாவில் கட்சி உட்பூசல் ஏற்பட்ட நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 12 பேரோடு சொகுசு விடுது ஒன்றில் அடைக்கலம் ஆகியுள்ளார். இந்த 12 எம்.எல்.ஏக்களை இழந்தால் சிவசேனா கூட்டணி பெரும்பான்மையை இழக்க வேண்டி வரும் என்பதால் ஏக்நாத் ஷிண்டேவிடம் சிவசேனா சமரசம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியது.
 
மகராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி கவிழாமல் இருக்க தனது முதல்வர் பதவியை விட்டுத்தரவும் உத்தவ் தாக்கரே தயாராக இருப்பதாக பேச்சு வார்த்தையின் போது சொன்னதாக தகவல்கள் வெளியாகியது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த அதிர்ச்சியில் இருந்து சிவசேனா மீள்வதற்குள்ளாகவே, அக்கட்சியைச் சேர்ந்த 30 எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் நேற்று திடீரென மாயமாகினர். அவர்கள் பாஜக ஆளும் குஜராத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
30 எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று இரவு விமானம் மூலம் அசாமின் குவாஹாட்டி நகருக்கு சென்றனர். அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.