அசாம் வெள்ளம் - 5.61 லட்சம் பேர் பாதிப்பு!
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை சுமார் 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
பல பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகோன் , காசார், மோரிகோன் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
வெள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் நாகோனில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.