புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (19:48 IST)

மீண்டும் இரவுநேர ஊரடங்கு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. உலகம் முழுவதும் ஏற்கனவே 7 கோடிக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதும், அதில் ஒரு கோடிக்கு மேல் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேர ஊரடங்கு முதலில் தளர்த்தப்பட்டு அதன் பின் பகல் நேரத்திலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் இரவு நேர ஊரடங்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் அமஒபடுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அம்மாநில மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் நாளை முதல் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு அதாவது இரவு 11 மணி முதல் 6 மணி வரை அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் தாண்டி மற்ற மாநிலத்திலும் அமல்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்