செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (08:15 IST)

லட்சத்தீவு செல்ல குவியும் புக்கிங்: மார்ச் மாதம் வரை விமான டிக்கெட் இல்லை..!

இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இந்தியர்கள் யாரும் இனி மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல மாட்டார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில் மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வரும் மார்ச் மாதம் வரை அனைத்து விமானங்களிலும் லட்சத்தீவுக்கு டிக்கெட் புக்கிங் முடிந்து விட்டதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடியின் லட்சத்தீவு வருகைக்கு பின்னர் லட்சத்தீவு பிரபல சுற்றுலா தளமாக மாறிவிட்டது.

மாலத்தீவு அதிபர் மற்றும் அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு காரணமாக இனி மாலத்தீவுக்கு புக்கிங் இல்லை என சுற்றுலா நிறுவனங்களும் அறிவித்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கவனம்  லட்சத்தீவு பக்கம் திரும்பியுள்ளது.

 
இந்தியர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் லட்சத்தீவை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளதை அடுத்து டிக்கெட் புக்கிங் குவிந்து வருகிறது.  லட்சத்தீவு செல்ல வங்கிகளில் ரூபாய் 200 ரூபாய் செலுத்தி விட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் புக்கிங் செய்துவிட்டதாகவும் மார்ச் மாதம் வரை அனைத்து விமானங்களில் புக்கிங் முடிந்து விட்டதால் சிறப்பு விமானங்கள் இயக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva