திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜனவரி 2024 (09:30 IST)

என்ன தைரியம் இருந்தா மாலத்தீவு போவீங்க..! – பிரபல நடிகையை வறுத்தெடுத்த சோசியல் மீடியா!

Bipasha Basu
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசியது சர்ச்சையான நிலையில் பிரபல நடிகை மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



பிரபலமான நடிகர், நடிகைகள் தங்கள் விடுமுறை நாட்களை கொண்டாட மாலத்தீவுகளுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மாலத்தீவின் 30 சதவீத வருமானம் சுற்றுலாவை நம்பி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம், கேரளா பயணித்தபோது லட்சத்தீவுகளுக்கும் சுற்றுலா சென்றார்.

அதுகுறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசியவை சர்ச்சைக்கு உள்ளாகியது. இதனால் இந்திய பிரபலங்கள் பலரும் மாலத்தீவை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக லட்சத்தீவுகளில் சுற்றுலாவை வளர்த்து எடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பலரது கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ள மாலத்தீவிற்கு பயணம் செய்து பிகினி புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் பிரபல இந்தி நடிகை பிபாஷா பாசு. இதனால் கோபமடைந்த நெட்டிசன்கல் பலர் அவரை கமெண்டில் திட்டி தீர்த்துள்ளனர். இந்த விவகாரத்தால் மாலத்தீவிற்கு செல்லும் இந்திய சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K