கோவிலில் பூசாரி முன் திருமணம் செய்து கொண்ட லெஸ்பியன் ஜோடி: வலுக்கும் எதிர்ப்பு..!
கோவிலில் பூசாரி முன் லெஸ்பியன் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த லெஸ்பியன் ஜோடி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாரம்பரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஜெய் ஸ்ரீ ராகுல் மற்றும் ராக்கிதாஸ் ஆகிய இரண்டு பெண்களும் ஒரே இசை குழுவில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது அவர்களது திருமணத்தை பல கோவில்களில் உள்ள பூசாரிகள் ஏற்கவில்லை. இதனை அடுத்து அவர்கள் திருமணத்திற்கான நோட்டரி சான்றிதழை பெற்று பவானி கோயிலுக்கு சென்று பூசாரி முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
தாங்கள் ஒரு சிறந்த வாழ்க்கையை தொடங்க இருப்பதாகவும் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயார் என்றும் ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இருக்கப் போவதாகவும் திருமணத்திற்கு பின்னர் அந்த பெண்கள் பேட்டி அளித்தனர்
Edited by Siva