1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (21:57 IST)

எம்பிக்கள் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்த திட்டமா?

தற்போதைய நாடாளுமன்ற எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டு நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 545 ஆக இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்தியாவின் மக்கள் தொகை 55 கோடியாக இருந்தபோது 545 எம்பிக்கள் இருந்ததாகவும், தற்போது மக்கள் தொகை 100 கோடியை தாண்டியுள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மக்களவை மாநிலங்களவை ஆகியவற்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்றும் அந்த கோரிக்கை தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் மக்களவை தொகுதிகள் ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளதை காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது