பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட 2 அவைகள்!!
மீண்டும் கூடியதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளி துவங்கியது.
மத்திய அரசின் மக்களவை மற்றும் மாநிலங்களை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பிற்கு பிறகு கூட்டப்படும் கூட்டத்தொடர் என்பதால் பிரதமர் மோடி அமைச்சர்கள் பட்டியல் அறிக்கையை வாசிக்க இருந்தார்.
இந்நிலையில் அமளி எழுப்பிய எதிர்கட்சிகள் பிரதமர் மோடியை பேச விடாமல் குறுக்கீடு செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் மக்களவை 2 மணி வரைக்கும், மாநிலங்களவை 12.25 வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 2 மணிக்கு அவை மீண்டும் கூடியதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி அமளி துவங்கியது. இதனால் மாநிலங்களவை 3 மணிக்கும், மக்களவை 3:30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.