பூட்டோ தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு!? – பாஜக நிர்வாகி அறிவிப்பு!
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தலைக்கு உள்ளூர் பாஜக நிர்வாகி பரிசு அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுதுறை அமைச்சராக இருப்பவர் பிலால் பூட்டோ. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர் பிரதமர் மோடி குறித்து விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிலால் பூட்டோவை கண்டித்து உத்தர பிரதேச மாநிலம் பாக்தாத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய பாஜக உள்ளூர் நிர்வாகி மனுபால் பன்சால் என்பவர், பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலால் பூட்டோவின் தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என பேசியுள்ளார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக கூறியுள்ளார்.
Edit By Prasanth.K