இந்தியாவுல மட்டுமில்ல.. உலகத்துலயே உயரமான தியேட்டர்! – எங்கே இருக்கு தெரியுமா?
உலகளவில் மிகவும் உயரமான பகுதி ஒன்றில் இந்தியாவில் முதன்முறையாக திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது வைரலாகியுள்ளது.
உலகில் மிக உயரமான பகுதிகள், நகரங்கள் பல இருந்தாலும் அவற்றில் கடல்மட்டத்திலிருந்து மிகவும் உயரமான மலைத்தொடரில் உள்ளது இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக். சமீபத்தில் லடாக் இந்திய யூனியனின் இணைக்கப்பட்ட நிலையில் அங்கு சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதன்முறையாக லடாக்கில் லே பகுதியில் நடமாடும் திரையரங்கை அமைத்துள்ளது டிஜிப்ளெக்ஸ் என்ற நிறுவனம். கடல்மட்டத்திலிருந்து சுமார் 11,562 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் உலகிலேயே மிக உயரத்தில் உள்ள திரையரங்கம் என பெயர் பெற்றுள்ளது. கிராமப்பகுதி மக்களும் சினிமா படங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.