கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!
நடிகை கங்கனாவை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது அவருடைய சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் சண்டிகர் விமான நிலையத்தில் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டது
கங்கனா ரனாவத் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்த நிலையில் விவசாயிகள் குறித்து தர குறைவாக பேசியதால்தான் அவரை கன்னத்தில் அறைந்ததாக விசாரணையில் குல்விந்தர் கௌதரிவித்துள்ளார். இந்த காரணம் விசாரணை அதிகாரிகளால் ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran