1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (21:46 IST)

கேதர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் கும்பமேளா நிகழ்ச்சி மட்டும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியால் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி வெளியானது 
 
இந்த நிலையில் கும்பமேளாவை அடுத்து தற்போது கேதார் யாத்திரை தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத் பத்ரிநாத் கங்கோத்ரி ஆகிய இடங்களுக்கு ஆன்மீக யாத்திரை தொடங்கும் என்பது தெரிந்ததே. இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கேதார் யாத்திரை மே மாதம் 14ஆம் தேதி தொடங்கும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த யாத்திரையை நடத்த வேண்டுமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் யாத்திரை தொடங்கும் தேதியை உத்தரகாண்ட் அரசு உறுதியாக அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது