வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 13 நவம்பர் 2024 (18:38 IST)

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

வரும் ஜனவரி முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவி தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஊரக வளர்ச்சி பணிகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்  ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பின்னர் பேசிய போது ஜனவரி மாதம் முதல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று திட்டவட்டமாக கூறினார்.

உதவித்தொகை வராத ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மகளிர் உதவி தொகை வழங்கப்படும் என்றும் முதியோர் உதவி தொகை விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.

ஏற்கனவே 1.16 கோடி பெண்கள் மாதந்தோறும் தற்போது உரிமை தொகை பெறுகின்றனர். இதில் தகுதி இருந்தும் பலருக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ள நிலையில் அனைத்து மகளிர்க்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Edited by Siva