புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:10 IST)

கேரளாவில் 7 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு! இயல்பு நிலை திரும்பல்!

கேரளாவில் 7 மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை இருக்கும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்புக் கம்மியாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு அம்மாநிலத்தை சிவப்பு, ஆரஞ்சு ஏ, ஆரஞ்சு பி, பச்சை என 4 மண்டலங்களாக பிரித்தது. இதையடுத்து சிவப்பு மண்டலத்தைத் தவிர மீதமுள்ள மூன்று மண்டலங்களில் உல்ள 7 மாவட்டங்களுக்கு இன்று முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒற்றைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் செவ்வாய்,வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரட்டைப் படை பதிவு எண் கொண்ட வாகனங்களும் இயங்க அனுமதிக்கப்படும். அவசர சேவையில் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.