திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:02 IST)

ஊரடங்கில் கள்ளத்தனமாக மது விற்பனை! திரௌபதி பட நடிகர் கைது!

ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் திரௌபதி படத்தில் நடித்த துணை நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் ஆங்காங்கே திருட்டுத் தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது சம்மந்தமாக நடந்த சோதனையில் சென்னையில் துணை நடிகர் ஒருவரும், ஓட்டுனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர் நகர் போலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின் ரோட்டில் துணை நடிகர் ரிஸ்வான் என்பவரிடம் இருந்து 57 குவார்ட்டர் பாட்டில்கள்,  12 பீர் பாட்டில்கள், ரூ.2300 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் அளித்த தகவலின் படி பிரதீப் மற்றும் ஓட்டுனர் தேவராஜ் ஆகியோரிடம் இருந்து மது பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ரிஸ்வாக் திரௌபதி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.