புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (08:26 IST)

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு! கேரள முதல்வர் புதிய திட்டம்!

கேரளாவில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டு குளங்களை தூர்வாரும் பணியினை கேரள முதல்வர் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய போது முன்னிலையில் இருந்த கேரளா பின்னர் அம்மாநில அரசின் சிறப்பான செயல்பாடுகளால் இப்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக உள்ளது.

ஊரடங்கு உத்தரவை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருந்த போதும், அங்கு தங்கியிருந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு உணவுக் கிடைக்கவில்லை என்றும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் எனவும் போராட்டம் நடத்தியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதனால் இப்போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முதல்வர் பினராயி விஜயன்.

கேரள மாநிலத்தில் உள்ள குளங்களை தூர்வாரும் பணியை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கிராமப்புற சாலை உள்ளிட்டவற்றைச் செப்பனிடும் பணிகளும் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.