1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (10:09 IST)

கையில வேணாம்.. கூகிள் பே பண்ணிடு..! – புதுவிதமாக லஞ்சம் வாங்கிய பலே போலீஸ்காரர்கள்!

அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
கேரளாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரிகள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் போக்குவரத்து காவலர்கள் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளதாக போக்குவரத்து ஏடிஜிபிக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. தற்போது ஓணம் காரணமாக போக்குவரத்து அதிகமாக உள்ள நிலையில் லஞ்சம் வாங்குவதும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போக்குவரத்து காவலர்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் ஒருவரிடமும் லஞ்ச பணம் அகப்படவில்லை. இதனால் லஞ்ச ஒழிப்பு துறையினர் போக்குவரத்து காவலர்களின் வங்கி கணக்குகளை சோதனை செய்தனர்.

அப்போது அதில் பல்வேறு எண்களில் இருந்தும் கூகிள் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் க்ரெடிட் ஆகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல சில ஏடிஎம் கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூதனமாக லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.