செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (12:58 IST)

என்னை மிரட்டி 13 முறை கற்பழித்தார் - பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்

தன்னை மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரளா  மாநிலத்தை ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்க சென்ற போது 5 பாதிரியார்கள் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அதேபோல் வேறொரு சம்பவமும் நடந்துள்ளது.
 
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குருவிலாங்காடில் கான்வெண்ட்டில் கன்னியாஸ்திரி ஒருவர் பணியாற்றி வருகிறார். அவரை பிஷப் பிராங்கோ என்பவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த கன்னியாஸ்திரி தற்போது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
2014ம் ஆண்டு விருந்தினர் மாளிகையில் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிஷப், தொடர்ந்து 13 முறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என அவர் போலீசாரிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால், அவரை வேறு இடத்திற்கு மாற்றினோம். ஆனால், அதை செய்யக்கூடாது என மிரட்டினார்கள். அதோடு, அடிப்படை ஆதாரம் இல்லாத புகாரை என் மீது அந்த கன்னியாஸ்திரி கூறியுள்ளார் என பிஷ்ப்பும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.