திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 ஜூன் 2018 (07:17 IST)

மணமகன் மனநிலையில் திடீர் மாற்றம்: திருமணத்தை நிறுத்திய மணமகள்

மணமேடையில் மணமகனின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த மணமகள் திடீரென அந்த திருமணத்தை நிறுத்திய சம்பவம் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பீகார் மாநிலத்தில் உள்ள சரண் என்ற பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. திருமண மண்டபத்தில் சிறிது நேரத்தில் மணமகள் கழுத்தியில் மணமகன் தாலி கட்டவிருந்த நிலையில் மணமேடையில் உட்கார்ந்திருந்த மணமகனின் நடவடிக்கையில் மணமகள் சந்தேகம் அடைந்தார். மணமகனின் மனநிலை குழப்பத்தில் இருந்ததை கண்டு இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என்று மணமகள் திடீரென மணமேடையை விட்டு எழுந்து சென்றுவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
 
இதுகுறித்து விசாரித்தபோது இரண்டு நாட்களுக்கு முன் மணமகன் மின்னல் ஒன்றை கண்டதில் இருந்து மனநிலையில் மாற்றம் அடைந்துள்ளதாகவும், அவர் எப்போதும் பயந்தபடியே இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 
 
இந்த நிலையில் திடீரென திருமணத்தை மணமகள் நிறுத்தியதால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருடன் சண்டை போட்டனர். இதில் கடுமையாக தாக்கப்பட்ட மணமகன் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது