அரசு கஜானா கொள்ளை போகும்போது எப்படி அமைதியாக இருப்பது? கவர்னர் கேள்வி
அரசு கஜானா கொள்ளை போகும்போது எப்படி அமைதியாக இருப்பது? கவர்னர் கேள்வி
அரசு கஜானா கொள்ளை போகும்போது எப்படி அமைதியாக வேடிக்கை பார்ப்பது என கேரள மாநில கவர்னர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநில கவர்னர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கேரள பல்கலைக்கழக நடவடிக்கைகளில் முதலமைச்சர் தலையிட மாட்டேன் என்று உறுதி அளித்தார் என்றும் ஆனால் தற்போது அவர் அதன் கட்டுப்பாட்டை கையில் எடுத்துக் கொள்ள முயற்சித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்
தகுதியில்லாத நபர்களையும் தனக்கு வேண்டியவர்கள் என்ற அடிப்படையிலும் முதலமைச்சர் பதவியில் நியமித்து வருவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
அரசாங்கத்தின் கஜானா பணம் கொள்ளை போகும் போது அதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் இதற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்